ரயில் பற்றிய அணைத்து தகவல்களையும் இப்போது WhatsApp மூலம் அறியலாம்


இந்திய இரயில்வே – இரயில் பயணங்கள் எளிதாக்கும் வகையில் புக்கிங் ஸ்டேட்டஸ்,ரயில் வருகை மற்றும் புறப்பாடு நேரம், டிக்கெட் இரத்துச் செய்தல் போன்ற தகவல்களை வாட்ஸாப்ப் மூலம் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 


 

   

ரயில்கள் எங்கே இருக்கிறது எப்போது குறிப்பிடப்பட்ட தளத்திற்கு வரும் என்பதை அறிய ரயில்வே துறை சார்பில் எண்கள் வழக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணிற்கு ரயில் எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அந்த ரயில் குறித்த முழு விவரம் நமக்கு வந்தடையும்.

 

 

இந்த வசதியை பெற 7349389104 மொபைலில் பதிவு செய்து கொள்ளவேண்டும். இந்த எண்ணிற்கு தகவல் தேவைப்படும் ரயிலின் எண்ணை வாட்ஸாப்ப் மூலம் அனுப்பினால் 10 வினாடிகளில் ரயில் ஓட்டம் குறித்த தகவல் கிடைக்க பெறும். 

 

ரயில் தற்போது எங்கே வந்துக்கொண்டிருக்கிறது. அடுத்து வரும் நிலையத்தின் பெயர். எத்துனை நிமிடங்களில் அந்த ரயில் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என்பது குறித்த தகவல்களை பெறலாம்.

One thought on “ரயில் பற்றிய அணைத்து தகவல்களையும் இப்போது WhatsApp மூலம் அறியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *