ஜி.பி.எஸ்(GPS) எவ்வாறு வேலை செய்கிறது ?

ஜி.பி.எஸ் சேவை நவீன ஸ்மார்ட்போனின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்றாகும்.நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக தெரிந்துகொள்வதற்கு இது உதவுகிறது. 

GPS- Global Positioning System

இந்த சேவை அணைத்து ஸ்மார்ட்போன்களிலும் (அண்ட்ராய்டு/ஐஒஸ்) ஒரே மாதிரியாகவே இயங்குகிறது. பல கூறுகள்  உங்களின் இருப்பிடத்தை துல்லியமாக கணிப்பதற்காக ஒன்றாக வேலை செய்கின்றன,மேலும் மென்பொருள் சிறந்த வழியில் அவற்றை செயல்படுத்துகிறது. துல்லியமான வழிதேடலுக்கு இதுவே சிறந்த தேர்வாகும் (Navigation).

ஜி.பி.எஸ்

ஜிபிஎஸ் என்றால் என்ன?

 

ஜிபிஎஸ்-குளோபல் பொசிஷனிங் சிஸ்டம். இது அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான (ஆமாம், சொந்தமான) தொழில்நுட்பம். இதை தன் நாட்டின் விமானப்படை மூலம் மேற்பார்வை செய்கிறது. இதை இலவசமான சேவையாக அளித்துவருகிறது.

ஜி.பி.எஸ் ஒரு ரேடியோ வழிசெலுத்தல் அமைப்பாகும். செயற்கைகோள் மற்றும் உங்கள் தொலைபேசியில் உள்ள பெறுநர்(ரிசீவர்) இடையேயான ரேடியோ அலைகளை பயன்படுத்தி இருப்பிடத்தை மற்றும் நேர தகவலை தெரியப்படுத்துகிறது. இது செயலாற்றுவதற்காக நீங்கள் எந்த தகவலையும் செயற்கைகோளிற்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை. புவியியல் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட 28 செயற்கைக்கோள்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களில் இருந்து தகவல்களை பெறுவதற்கு இயலவேண்டும்(Receive only).

ஒவ்வொரு செயற்கைக்கோள் அதன் சொந்த அணு கடிகாரத்தை கொண்டிருக்கிறது மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நேர குறியீட்டு சமிக்ஞையை அனுப்புகிறது.உங்கள் பெறுதல்(ரிசீவர்)சிப் எந்த செயற்கைகோள் காணக்கூடிய மற்றும் தடைப்படாத வகையில் உள்ளது என்பதை நிர்ணயிக்கிறது. பின்னர் வலுவான சமிக்ஞையுடன்(Signal) செயற்கைக்கோள்களின் தரவையை சேகரிக்கத் தொடங்குகிறது.உங்கள் தொலைபேசியின் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு இந்த சிக்னல்களின் தரவுகளைப் பயன்படுத்தி உங்களின் இருப்பிடம் மற்றும் நேரத்தை கணிக்கிறது.

 

  


ஜி.பி.எஸ் துல்லியமானது, ஆனால் அது மெதுவாக இருக்கிறது மற்றும் இரு முனைகளிலும் நிறைய சக்திகளைப் பயன்படுத்துகிறது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *