நீங்கள் வாட்ஸாப்-இல் நண்பர்களால் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி தெரிந்து கொள்வது

தகவல் அனுப்ப உதவும் வாட்ஸாப் செயலியில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களில் ஒன்று, தாங்கள் பேச விரும்பாதவரின் தொடர்பை/எண்ணை பிளாக்(தடுப்பது) செய்வது.

இதை கண்டுபிடிக்க நிச்சயமான வழி இல்லை என்றாலும், ஒரு சில அடையாளங்கள் மூலம் ஓரளவிற்கு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.   

பின்வரும் வழிமுறைகளை முயற்சி செய்துபார்த்து அதனை தெரிந்துகொள்ளலாம் :

 

  • அந்த நபரின் சாட் விண்டோவ்விற்கு(chat window) சென்று அவரின் லாஸ்ட் சீன் ( அவர் கடைசியாக பயன்படுத்திய நேரம் ) அல்லது அவர் ஒன்லைனில்(online) உள்ளாரா என்று பார்க்கவும். நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்களா என்பதற்கு முதல் மற்றும் எளிதான வழி இது. அவர் “கடைசியாக பார்க்கப்பட்ட” அமைப்புகளை மாற்றியமைத்திருக்கக்கூடும் என்பதால் இது உறுதியானது இல்லை .ஆனால் இதும் ஒரு சுட்டிக்காட்டிகளில் ஒன்றாக உள்ளது.
  • தொடர்புகளின் சுயவிவர புகைப்படத்தை  புதுப்பித்துள்ளாரா(மாற்றியுள்ளாரா) என்பதை காணவும்.நீங்கள் WhatsApp இல் தடுக்கப்படுகிறீர்கள் என்றால், ஒரு பயனரின் சுயவிவரம் பற்றிய மாற்றங்கள் உங்களுக்கு தெரியாதவாறு இருக்கும். அவர் கடைசியாக உங்களிடம் பேசியபோது இருந்த புகைப்படத்தை மட்டுமே உங்களால் காணமுடியும்.மாற்றங்களை நீங்கள் காண முடியவில்லையெனில், நீங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம்.    

வாட்ஸாப்

 

  • தொடர்புக்கு ஒரு செய்தியை அனுப்பவும்:

நீங்கள் தடுக்கப்பட்ட ஒரு தொடர்புக்கு அனுப்பப்படும் எந்த செய்திகளும் எப்போதும் ஒரு டிக் குறிப்பை காண்பிக்கும், அதாவது உங்கள் பக்கத்திலிருந்து செய்தி அனுப்பப்பட்டது,ஆனால் செய்தி(சென்றுவிட்டது)  வழங்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் இரட்டைச் சரிபார்ப்பு(டிக்) காட்டப்படாது. இதன்முலம் நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறியலாம்.  

 

  • தொடர்புக்கு அழைக்கவும்(கால் செய்யவும் ) :

நீங்கள் தடுக்கப்பட்டிருந்தால் WhatsApp மூலமாக தொடர்புகொள்ள(கால் செய்ய) முடியாது. இதன்முலம் நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறியலாம்.  

 

 

 

நன்றி !!

மேலும் உங்கள் சந்தேகங்களை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *