உங்கள் ஸ்மார்ட்போன் வெப்பமடைவதை எப்படி தவிர்ப்பது ??

‘என் ஸ்மார்ட்போன் வெடிக்குமா ?’  என்பதே தற்போதைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் கவலையாக இருக்கிறது.

ஸ்மார்ட்போன் பேட்டரி சூடாகி வெடிப்பதை எப்படி தடுத்து நிறுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஏன் பேட்டரிகள் தீப்பிடித்து வெடிக்கின்றன ?
ஒரு தொலைபேசியின் பேட்டரி வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.அதில் மிகவும் முக்கியமான இரண்டு காரணங்கள்.
முதலாவதாக நம் ஸ்மார்ட்போனின் லித்தியம் அயன் பேட்டரி சேதமடைவது. ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் அதில் சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு பேட்டரி வெடிக்க நேரிடலாம்.
பேட்டரி அதிக அளவில் சூடாவதே இரண்டாம் காரணம். பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் செய்யும் போது அதிலிருந்து குறிப்பிட்ட அளவு வெப்பம் வெளிப்படும், அந்த வெப்பத்தின் அளவு அதிகமானால் சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு வெடிக்கும்.
ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கு பேட்டரி மட்டுமே  காரணமாகாது.பாஸ்ட் சார்ஜிங் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களும் வெப்பம் அதிகமாவதிற்கு காரணமாகிறது.
பேட்டரி வெடிப்பதை எப்படி தடுக்கலாம் :
சரியான சார்ஜரை பயன்படுத்தவும் – உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும்.

•  நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும் – சூரிய ஒளியில் படும்படி வைப்பதனால் சூடேறி வெடிக்கும் அபாயம் உள்ளது.

• அழுத்தம் தவிர்க்க வேண்டும் – ஸ்மார்ட்போன் அதிக அழுத்தத்தின் கீழ் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சார்ஜ் முழுமை அடைந்தவுடன் துண்டிக்கபடவேன்டும் – சார்ஜ் முழுமை அடைந்தவுடன் துன்டிப்பதன் மூலம்  தேவையற்ற வெப்பம் வெளிபடுவதை தவிர்க்கலாம்.

பேக் கேஸ் நீக்கவும் – சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் பின்புறம் உள்ள பேக் கேஸ் நீக்கினால் வெப்பம் தனிவதர்கு எளிதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *