உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் குறியீடுகளை(codes) ஸ்கேன் செய்வது எப்படி

உங்கள் ஸ்மார்ட்போன் QR குறியீடுகள் மற்றும் பார்கோடுகளை படிக்கும் திறன் கொண்டது, ஆனால் உங்களிடம் அதற்கு பயன்படுத்தப்படும் சரியான செயலி தேவை.


ஒரு Android தொலைபேசியில் குறியீடுகளை எப்படி ஸ்கேன் செய்வது என்பதை இங்கு காணலாம். 


பார்கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த பொருளின் விலை ஒப்பீடுகள் மற்றும் பயனர் மதிப்புரைகள் போன்ற தயாரிப்பு தகவலை தெரிந்து கொள்ளலாம்.நீங்கள் செய்ய வேண்டியவை சரியான செயலியை பதிவிறக்கம் செய்து, பின்னர் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கேமராவை பயன்படுத்தி அதனை ஸ்கேன் செய்வது மட்டுமே. 

ஸ்கேன் செய்வதற்கு ஆயிர கணக்கில் செயலிகள் உள்ளன, அதில் நாங்கள் இரண்டு பிரபலமான மற்றும் அதிகமாக பயன்படுத்த பட்டு வரும் செயலிகளை இங்கு சொல்கிறோம். 

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் மூலம் QR குறியீடுகள் ஸ்கேன் செய்வது எப்படி :

  • Google Play விலிருந்து QR குறியீடு ரீடர் (QR Code Reader)செயலியை பதிவிறக்கவும்.
  • QR குறியீடு ரீடர் வெளியீடு/துவக்கவும்(Launch) செய்யவும். 
  • படங்களை எடுத்து வீடியோவை பதிவு செய்ய செயலி-க்கு அனுமதியை அனுமதிக்கவும்
  • ஸ்கிரீன்-இல் காட்டப்பட்ட சதுரத்தின் உள்ளே QR குறியீடு வருமாறு சரியாக கேமராவை அமைக்கவும்.  
  • செயலி QR குறியீட்டைப் படித்து அதனுடன் தொடர்புடைய வலைத்தளத்திற்கு ஒரு இணைப்பை வழங்கும். 

 

ஸ்மார்ட்போன் மூலம் பார்கோடுகளை ஸ்கேன் செய்வது எப்படி :

  • Google Play இலிருந்து பார்கோடு ஸ்கேனரைப்(Barcode Scanner) பதிவிறக்கவும்.
  • பார்கோடு ஸ்கேனரைத் துவக்கவும்(Launch).
  • கேமராவை ஸ்கேன் செய்வதற்கு ஏற்றவாறு சரியாக நிலைநிறுத்தவும், 
  • ஸ்கேன் செய்யப்பட்ட பொருளில் உங்களுக்கு தேவையான தயாரிப்பு தேடல் அல்லது வலை தேடலைத் தேர்ந்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *