அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செயல்திறனை வேகமாக்குவது எப்படி

ஸ்மார்ட்போன் செயல்திறனை எப்படி வேகமாக்குவது ?


மெதுவாக/மந்தமாக செயல்படுவதில் இருந்து எந்த ஒரு ஸ்மார்ட்போன்களும் விதிவிலக்கல்ல, உங்கள் ஸ்மார்ட்போன் செயல்திறனை மேம்படுத்துவது எப்படி என்பதை இங்கே காணலாம்.


உங்களின் தற்போதைய சாதனம் மெதுவாக மற்றும் எரிச்சலூட்டும் வகையில் உள்ளதா ?

இந்த நிலைமை மேம்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. 

பயன்படுத்தப்படாத செயலிகளை நீக்கவும் :

ஸ்மார்ட்போன் மெதுவாக செயல்படுவதற்கு அதிகப்படியான செயலியை பதிவிறக்கம் செய்துவைத்திருப்பதே பொதுவான காரணமாக அறியப்படுகிறது. அதனால் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற மற்றும் அதிகம் பயன்படுத்தாத செயலிகளை நீக்கவும். 

ஸ்மார்ட்போனில் அதிகப்படியான மெமரி பயன்படுத்துவதினால் வேகம் குறையும் வாய்ப்பு அதிகம்.

 

மீடியா பைல்கலை(media)அகற்றவும் :

ஸ்மார்ட்போன் செயல்திறனை மந்தமாக்குவதில் போனில் அதிகப்படியாக உள்ள படங்கள்,பாடல்கள் மற்றும் உயர் தரமான வீடியோக்களின் பங்கும் இருக்கும். 

 உங்கள் சாதனம் வேகமாக செயல்பட அதிகம் பயன்படுத்தாத வீடியோ மற்றும் படங்களை நீக்கவும்.

  •  முக்கியமான மீடியா பைல்களை உங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.    

விட்ஜெட்கள் (widgets) அகற்றவும் :

சாளரங்கள்(widgets) ஆண்ட்ராய்டு-இன் சிறந்த அம்சமாகும், ஆனால் ஒரு ஐகானைக் காண்பிப்பதை ஒப்பிடும்போது அவை இயங்குவதற்கு கூடுதல் செயலாக்கத்தை எடுத்துக்கொள்கின்றன.

நீங்கள் பல விட்ஜெட்களை ஹோம் மெனுவில் வைத்துள்ளீர்களென்றால், அதில் உங்களுக்கு அதிகம் பயன்படும் ஐகான்ஐ மட்டும் வைத்துக்கொண்டு விட்ஜெட்டை நீக்கச்செய்யலாம், இது உங்கள் Android சாதனத்தில் சுமை குறைக்க மற்றும் அதை வேகப்படுத்த உதவும்.  

 

ரேம்-ஐ அழிக்கவும் : (RAM)

பின்னணியில் இயங்கிவரும் செயலிகளை தெடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

சமீபத்திய பயன்பாடுகளைப் (Recent Apps) சென்று அதில் நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை ஸ்வைப் செய்வதன் மூலம் நிறுத்தலாம்.   

இருப்பினும், உங்கள் Android சாதனத்தில் ஒரு பயன்பாட்டை (செயலி) நிறுத்தி அல்லது மெமரியை முழுவதுமாக அழிப்பதன் மூலம் வேகப்படுத்தலாம்.

  • Advanced Task Killer என்னும் செயலியை  Play Store இல் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தி ரேம் அழிக்க செய்யலாம்.

பேக்டரி  ரீசெட் :

அணைத்து வழிகளும் செயல்படவில்லை என்றால் உங்கள் சாதனத்தின் முழுமையான பேக்டரி  ரீசெட் செய்வதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது சிறந்தது அல்ல ஆனால் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் மிகவும் மெதுவாக இருப்பபதற்கான காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டால் இதுவே சிறந்த வழி.  

ஸ்மார்ட்போன் ரீசேட் செய்வதின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் முழுமையாக புதிய ஸ்மார்ட்போன் போல் மாறும்.

 

எப்படி பேக்டரி  ரீசெட் செய்வது என்று இங்கு காணலாம் http://gadgettamilan.com/reset-mobile/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *