மைக்ரோவேவ் ஓவென்ஸ்( Microwave ovens) :அது எப்படி வேலை செய்கிறது ?

மைக்ரோவேவ்  ஓவென்ஸ்  (நுண்ணலை அடுப்பு – Microwave ovens)

 

1970 களில் நுண்ணலை அடுப்பு(மைக்ரோவேவ் ஓவென்ஸ்)பிரபலமடைந்தபோது,​வீட்டு வசதிக்காக  பயன்படுத்தப்படும் பொருட்களில் இது புதிய நிலைக்கு  தூக்கிவைக்கப்பட்டது.

ஒரு வழக்கமான அடுப்பு வெளிப்புறத்தில் இருந்து மிகவும் மெதுவாக உணவுகளைச் சூடுபடுத்தும் .ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சிறிய, அதிக திறன் கொண்ட ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி நேரடியாக உணவை வேகமாக சூடுபடுத்தலாம்.மைக்ரோவேவ் ஓவென்ஸ்

 

மைக்ரோவேவ் ஓவென்இல் ஒரு வழக்கமான அடுப்பை விட சுமார் ஆறு மடங்கு வேகமாக உணவைசமைக்க முடியும்

 

நுண்ணலை அடுப்புகள்  மிக விரைவாகவும் திறமையாகவும் இருக்கும், ஏனென்றால் அவை வெப்ப ஆற்றலை நேரடியாக மூலக்கூறுகளுக்கு (சிறிய துகள்கள்) உணவிற்கு உட்படுத்துகின்றன.சூரியன் உங்கள் முகத்தை கதிர்வீச்சால் சுடுவது போன்று இவை உணவை சுடுகின்றது.

 

மைக்ரோவேவ் ஓவென்ஸ்

 

மைக்ரோவேவ் உணவை எப்படி சமைக்கின்றது  ?

ஒரு நுண்ணலை (microwave) எவ்வாறு மின்சாரத்தை  வெப்பமாக மாற்றுகிறது.

 

  • லுவான உலோக பெட்டி உள்ளே,  நுண்ணலை ஜெனரேட்டர்  magnetron என்று அழைக்கப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது . சமையல் செய்யும் போது, ​​மின்சக்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை எடுத்து அதை 12cm (4.7 அங்குல) ரேடியோ அலைகொண்ட  உயர் மின்சக்தியாக அது மாற்றுகிறது .
  • அலை வழிகாட்டி என்று அழைக்கப்படும் ஒரு சேனலின் ஊடாக உணவு அடுக்கில் இந்த அலைகளை magnetron செலுத்தும்
  • உணவை மெதுவாக சுழற்றும்  கருவியின் உதவியுடன் நுண்ணலைகள் அதை சமைக்கின்றன.
  • ஒரு கண்ணாடியிலிருந்து வெளிச்சம் பாய்ந்து வருவதைப்போல, உணவுப் பெட்டியின் பிரதிபலிப்பு உலோக சுவர்களில் இருந்து நுண்ணலைகள் மீண்டும் முன்னும் பின்னுமாக ஓடுகின்றன.நுண்ணலைகள் உணவு உள்ளே ஊடுருவி செல்லும், அதை கடந்து செல்லும் போது, ​​அவை உள்ளே உள்ள மூலக்கூறுகளை அதிவிரைவில் அதிரவைக்கின்றன.
  • மூலக்கூறுகள் அதிர்வுக்குள்ளாகின்ற போது வெப்பம் உண்டாகிறது,இவ்வாறு நுண்ணலைகள் தங்கள் ஆற்றலை உணவு மூலக்கூறுகளுக்குள் கடந்து விரைவாக வெப்பமாக்குகின்றன.

 

நுண்ணலை அடுப்புகள் வழக்கமான அடுப்பை விட ஆற்றலை குறைவாக பயன்படுத்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *