WhatsApp ஸ்டேட்டஸ் டவுன்லோட் செய்வது எப்படி ?

வாட்ஸாப் தங்களது சேவைகளில் ஸ்டோரி(ஸ்டேட்டஸ்)எனும் அம்சத்தை வழங்கிவருகிறது. 

 ஸ்டோரிக்களில்(ஸ்டேட்டஸ்)ஒருவர் தான் விரும்பும் புகைப்படம், வீடியோ போன்றவற்றை பதிவு செய்தால், அது ஒரு நாள் கழித்து தானாக அழியும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது .


இந்த அம்சம் சமூக வலைத்தளம் பயண்பாளர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பலரும் அதிகளவு ஸ்டோரிக்களை பதிவிடுகின்றனர்.ஸ்டோரி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகிய  நிலையிலும் இதற்கான வரவேற்பு குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.


whatsapp

 

நாள்தோறும் உலகமுழுவதும் பல லட்சக்கணக்கில் ஸ்டோரிகள் பதிவிடுகின்றனர். சிலர் இவற்றை பார்த்து விட்டு செல்வர், பலர் இவற்றை பதிவிறக்கம் செய்து பின்னர் பார்க்கவோ அல்லது அதையே தங்களின் ஸ்டோரியாக வைக்க விரும்புவர்.

பதிவிறக்கம் செய்ய விரும்புவர்களுக்கு ஸ்டேட்டஸ் இருக்கும் வீடியோக்களை டவுன்லோடு(பதிவிறக்கம்)செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

 

செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்:

வாட்ஸ்அப் செயலியில் மற்றவர்களின் ஸ்டேட்டஸ்-ஐ டவுன்லோடு செய்வதற்கு என்றே பல்வேறு செயலிகள் பிலேஸ்டோர் இல் இருக்கின்றன.இது போன்ற செயலிகள் பயன்படுத்துவது மிகவும் எளிமையானது தான்.

பிலேஸ்டோர்  இல் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் ஸ்டோரி டௌன்லோடேர் என்று சர்ச் செய்தால் செயலிகள் கிடைக்கும்.

 

  கூகுள் பிளேஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி உங்களின் மொபைலில் இன்ஸ்டால் செய்யவேண்டும்,இன்ஸ்டால் செய்தபின் செயலி தானாக உங்களின் வாட்ஸ்அப்-இல் இணைந்து கொள்ளும். ரீசென்ட்ஸ் ஸ்டோரிஸ் அம்சத்தை க்ளிக் செய்து உங்களுக்கு டவுன்லோடு செய்யப்பட வேண்டிய ஸ்டோரியை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்தால் அது பதிவிறக்கம் செய்துவிடும்.

 

 

 

 

குறிப்பு –  பிலேஸ்டோர் அல்லாது வேறுஎங்கும் செயலியை பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவிறக்கம் செய்யவேண்டாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *